Pages

Monday 17 January 2022

டெல்டாவை முந்திக்கொண்டு வேகமாக பரவும் ஒமைக்ரோன்!

 டெல்டாவை முந்திக்கொண்டு ஒமைக்ரோன் திரிபு வேகமாக பரவும் நிலை காணப்படுவதாக சிறி ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீட ஒவ்வாமை, மூலக்கூற்று நுண்ணுயிர் பிரிவின் தலைவரான கலாநிதி சந்திம ஜீவந்தர (Chandima Jeevanthara) தெரிவித்துள்ளார்.

அச்சுறுத்தும் ஒமிக்ரோன்

இதனால் இலங்கையின் முக்கிய வைரஸாக ஒமைக்ரோன் வைரஸை தற்போது குறிப்பிடமுடியும் எனவும் தெரிவித்துள்ளார்.

நாட்டில் இதுவரை 208 ஒமைக்ரோன் தொற்று நோயாளிகள் இனங்காணப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

புதிதாக இனங்காணப்பட்டுள்ள ஒமைக்ரோன் வைரஸ் தொற்றுநோயாளர்களில் பெரும்பாலானோர் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு, வெளிநாடுகளுக்கு செல்வதற்காக வந்தவர்கள் என சுட்டிக்காட்டியுள்ளார்.

அவர்கள் கொழும்பு, கம்பஹா, காலி, மாத்தறை, திருகோணமலை ஆகிய மாவட்டங்களை வதிவிடமாகக் கொண்டவர்கள் என்பதையும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment

பிரபல பாடசாலை ஒன்றின் அதிபர் சற்றுமுன் கைது

 Al Mashoora News🇱🇰 🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰  ----------------------------------- * 2022/01/28 * ---------------------------------...