Pages

Monday, 17 January 2022

இலங்கையில் கடந்த 15 நாட்களில் அடையாளம் காணப்பட்ட மற்றுமொரு அபாய நோய்

------------------------------

*2022/01/17*

------------------------------

இலங்கையில் இந்த ஆண்டின் முதல் 15 நாட்களில் மாத்திரம் 5 மலேரியா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக மலேரியா நோய் ஒழிப்பு பிரிவின் பணிப்பாளர் டொக்டர் பிரசாத் ரணவீர தெரிவிக்கின்றார்.

மலேரியா காய்ச்சல்
இவ்வாறு அடையாளம் காணப்பட்ட ஐவரும், ஆபிரிக்க நாடுகளிலிருந்து இலங்கைக்கு வருகைத் தந்தவர்கள் என அவர் கூறுகின்றார்.


யாழ்ப்பாணம், கம்பஹா, கொழும்பு மற்றும் காலி ஆகிய பகுதிகளிலிருந்தே, இந்த நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.


மலேரியா பரவல் குறித்து மலேரியா நோய் ஒழிப்பு பிரிவின் பணிப்பாளர் டொக்டர் பிரசாத் ரணவீர கருத்து வெளியிட்டார்


”இலங்கைக்குள் மலேரியா பரவும் அபாயம் காணப்படுகின்றது. தற்போது அடையாளம் காணப்பட்டுள்ள ஐந்து நோயாளர்களும் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். வெளிநாடுகளிலிருந்து நாட்டிற்கு வருகைத் தரும் பிரஜைகளின் விபரங்களை சேகரிப்பது தொடர்பிலான பேச்சுவார்த்தை தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது. கொவிட் வைரஸ் நாடு முழுவதும் பரவுவதை தடுப்பது போலவே, மலேரியாவை தடுப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும். அவ்வாறு தடுக்கவில்லை என்றால், மலேரியாவிற்கும் தடுப்பூசி செலுத்த வேண்டிய நிலைமை ஏற்படும். மலேரியா காணப்படுகின்ற நாடுகளிலிருந்து வருகைத் தருவோருக்கு காய்ச்சல் உள்ளிட்ட நோய் அறிகுறிகள் தென்படும் பட்சத்தில், மலேரியா தொடர்பிலான பரிசோதனைகளை செய்துக்கொள்ள வேண்டும்” என அவர் கூறியுள்ளார்.


🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰

------------------------------

No comments:

Post a Comment

பிரபல பாடசாலை ஒன்றின் அதிபர் சற்றுமுன் கைது

 Al Mashoora News🇱🇰 🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰  ----------------------------------- * 2022/01/28 * ---------------------------------...